×

அதிமுக - பாஜக கூட்டணி அதிகாரத்தை பெற்றால் தமிழர்கள் அனாதை ஆக்கப்படுவார்கள் -  கருணாஸ்..!

 

பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் கலந்து கொண்டு மரியாதை செலுத்திய கருணாஸ், தமிழர்கள் அ.தி.மு.க, பா.ஜ.க-விடம் உஷாராக இருக்க வேண்டும் என்று கூறினார்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று (அக்.30) செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி அதிகாரத்தை பெற்றால் தமிழர்கள் அனாதை ஆக்கப்படுவார்கள் என கருணாஸ் விமர்சித்துள்ளார். “எடப்பாடி பழனிசாமி கையில் அதிமுக சென்றதில் இருந்து, அந்த கட்சியில் இருந்த செல்வாக்கும் மிக்க அரசியல் தலைவர்கள் நீக்கப்பட்டு வருகின்றனர். மேலும், பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்த இரு கட்சிகளும் அதிகாரத்தை பெற்றால் தமிழர்களை அனாதை ஆக்கிவிடுவார்கள்” என்றார்.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/9S2iPJhnIrQ?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/9S2iPJhnIrQ/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden;" width="640">