×

விஜய்க்காக இறங்கி வந்த தமிழ் ராக்கர்ஸ்..! ஜன நாயகன் படத்தை வெளியிட மாட்டோம்..!

 

தமிழ் ராக்கர்ஸ் என்ற பைரசி தளம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவை எப்படி நிலைகுலையச் செய்தது என்று சினிமா ரசிர்களுக்கு நன்கு தெரியும். புதிய திரைப்படங்கள் வெளியாகும் நாள் அன்றே, நல்ல பிரிண்டில் அந்தப் படம் வெளியாகும். இதனால், தயாரிப்பாளார்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகினர். தமிழ் ராக்கர்ஸ் பைரசியை செயல்படுத்தி வந்த நபரை சில மாதங்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர். ஆனாலும், வேறு வேறு பெயர்களில் தற்போது இந்த பைரசி தளம் செயல்பட்டு கொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்று விஜயின் ஜனநாயகன் படம் இணையத்தில் லீக் ஆனது. முதலில் 5 நிமிடம் சீன் லீக் ஆனது, அதன் தொடர்ச்சியாக முழு படமும் லீக் ஆகி படக்குழுவிற்கு அதிர்ச்சியை தந்தது.  

தமிழ் ராக்கர்ஸ் அரசால் முடக்கப்பட்டிருக்கும் நிலையில், பல்வேறு பெயர்களில் வலைதளங்களை தொடங்கி திரைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அவற்றில் ஒரு வலைதளமான தமிழ் எம்வி-யில், "விஜய்யைச் சுற்றி நிலவும் அரசியல் சார்ந்த விவகாரங்களை நாங்கள் நன்கு அறிவோம். எங்கள் நெறிமுறைகளின்படி, ஒரு திரைப்படம் திரையரங்குகளில் அதிகாரப்பூர்வமாக வெளியான பின்னரே நாங்கள் அதனை வெளியிடுவோம். எனவே, இப்படம் அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்கு முன்பாக இங்கு பதிவேற்றம் செய்யப்படாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.