×

வடகிழக்கு பருவமழை விலகியது: வானிலை மையம் தகவல்!!

 

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் கொட்டித் தீர்த்தது.  தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியில், அக்டோபர் முதல் டிசம்பர் வரையில் வடகிழக்குப் பருவ காலத்தில் பெய்யும் மழையை காட்டிலும்,  59 சதவீதம் அதிகமாக கிட்டத்தட்ட 71 சென்டிமீட்டர் மழை பெய்தது.  சென்னையில் 136 சென்டிமீட்டர் மழை கிடைத்தது.  இதன் காரணமாக வழக்கத்தை விட சென்னையில் 74 சதவீதம் அதிகம் வடகிழக்கு பருவமழை கிடைத்தது. 

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை இன்று தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் அதனை ஒட்டிய கடலோர ஆந்திரா , ராயலசீமா , தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரள பகுதிகளில் இருந்து விலகியது. இன்று முதல் 26ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும். அதேசமயம் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை  என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது .