×

டாஸ்மாக் வழக்கு! அமலாக்க துறை விசாரணைக்கு தடையில்லை!

 

டாஸ்மாக் ரெய்டுக்கு எதிரான தமிழக அரசு வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததது.

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை சோதனை நடத்திய அமலாக்கத்துறை, மதுபானங்கள் கொள்முதல், பார் உரிமங்கள் வழங்கியது, மதுபானங்கள் போக்குவரத்து உரிமங்கள் வழங்கியது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து, அமலாக்க துறையின் சோதனையையும், பறிமுதலையும் சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி, விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளை துன்புறுத்த தடை கோரியும் தமிழக அரசு தரப்பிலும், டாஸ்மாக் நிர்வாகம் தரப்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த நிலையில், டாஸ்மாக் ரெய்டுக்கு எதிரான தமிழக அரசு வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததது. இது தொடர்பாக வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், அமலாக்க துறை விசாரணைக்கு தடையில்லை என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.