×

‘அலங்கரிக்கப்பட்ட தலைமை செயலகம்’ இன்று தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்!

தமிழ்நாடு நாளையொட்டி, இன்று சென்னை மாகாணம் முழுவதும் சீரமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 1956ம் ஆண்டு நவ.1ம் தேதி மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழ் பேசும் மாகாணமாக சென்னை மாகாணம் அறிவிக்கப்பட்டு, தமிழர் தாயமாக தமிழ்நாடு உருவானது. மேலும் சென்னையில் மாகாணத்துடன் இருந்த மலையாளம், கன்னடம் பேசும் மக்கள் அந்தந்த மாநிலங்களுடன் இணைக்கப்பட்டனர். இந்த தினம் ஆண்டு தோறும் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் தான் தெற்கு எல்லையில் குமரியும், வடக்கு
 

தமிழ்நாடு நாளையொட்டி, இன்று சென்னை மாகாணம் முழுவதும் சீரமைக்கப்பட்டு வருகிறது.

கடந்த 1956ம் ஆண்டு நவ.1ம் தேதி மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழ் பேசும் மாகாணமாக சென்னை மாகாணம் அறிவிக்கப்பட்டு, தமிழர் தாயமாக தமிழ்நாடு உருவானது. மேலும் சென்னையில் மாகாணத்துடன் இருந்த மலையாளம், கன்னடம் பேசும் மக்கள் அந்தந்த மாநிலங்களுடன் இணைக்கப்பட்டனர். இந்த தினம் ஆண்டு தோறும் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த தினத்தில் தான் தெற்கு எல்லையில் குமரியும், வடக்கு எல்லையில் திருத்தணியும் இணைந்த நிலையில், இதற்காக பல தியாகிகள் இன்னுயிர் நீத்தனர் என வரலாறு கூறுகிறது. இன்று தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுவதையொட்டி, சென்னை தலைமை செயலகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தாய் மொழியான தமிழ் மொழியை இந்திய அரங்கில் உயர்த்த தொடர்ந்து பாடுபடுவோம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.