குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறு விழிப்புணர்வு ஏற்படுத்திய எஸ்.ஐ-க்கு முதலமைச்சர் பாராட்டு!
Apr 18, 2023, 12:00 IST
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறு விழிப்புணர்வு ஏற்படுத்திய பென்னாலூர்பேட்டி காவல் உதவி ஆய்வாளருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மதுரையை சேர்ந்தவர் பரமசிவம் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பென்னாலூர்பேட்டை காவல் நிலையத்தில் பயிற்சி உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஊத்துக்கோட்டை அருகே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்களிடம், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அவருக்கு பாராட்டுக்களை பெற்று தந்து வருகிறது. இதேபோல் அவர் எங்கு சென்றாலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.