சுயநலமின்றி பொதுமக்களுக்காக உழைத்த ராஜாஜியின் புகழை போற்றி வணங்குவோம் - அண்ணாமலை
Dec 10, 2023, 12:50 IST
சுயநலமின்றி பொதுமக்களுக்காக உழைத்த அமரர் ராஜாஜி அவர்கள் புகழை போற்றி வணங்குகிறோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவ அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சுதந்திரப் போராட்ட வீரரும், உப்பு சத்தியாக்கிரக போராட்டத்தை தமிழகத்தில் முன்னின்று நடத்தியவரும், சென்னை மாகாண முதல்வராகவும், சுதந்திர இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகவும் பதவி வகித்த மூதறிஞர் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் பிறந்த தினம் இன்று.