×

சிவில் நீதிபதியாக தேர்ச்சி பெற்றுள்ள லூர்து பிரான்சிஸின் மகன் - அண்ணாமலை வாழ்த்து!

 

மணல் கொள்ளையை தடுத்ததற்காக வெட்டிக் கொலை செய்யப்பட்ட லூர்து பிரான்சிஸ் சேவியரின் மகன் மார்ஷல் ஏசுவடியான் சிவில் நீதிமன்ற நீதிபதியாகத் தேர்ச்சி பெற்றுள்ளார் என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையர்களைத் தடுக்க நடவடிக்கை எடுத்ததற்காக தனது அலுவலகத்திலேயே வைத்து படுகொலை செய்யப்பட்ட, தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் அமரர் லூர்து பிரான்சிஸ் சேவியர் அவர்கள் மகன், சகோதரர் மார்ஷல் ஏசுவடியான் அவர்கள், சிவில் நீதிமன்ற நீதிபதியாகத் தேர்ச்சி பெற்றுள்ளார் என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.