×

பிரதமர் மோடியின் ஆட்சியில் அனைத்து சமூகத்தினருக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது - அண்ணாமலை

 

பிரதமர் மோடியின் நல்லாட்சியில் நாடு முழுவதும் அனைத்து சமூகங்களுக்கும் உரிய முக்கியத்துவமும் பிரதிநிதித்துவமும் கிடைக்கப்பெற்று வருகின்றன என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் நல்லாட்சியில், நாடு முழுவதும் அனைத்துச் சமூகங்களுக்கும் உரிய முக்கியத்துவமும் பிரதிநிதித்துவமும் கிடைக்கப்பெற்று வருகின்றன. நமது நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளில், பாரதப் பிரதமர் மோடி அவர்கள் அமைச்சரவையில்தான், அருந்ததியர் சமூகத்திற்கும் மாதிக சமூகத்திற்கும், பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கிறது. இரு பெரும் சமூகத்தின் பிரதிநிதிகளாக மாண்புமிகு மத்திய இணையமைச்சர்கள் அண்ணன் எல்.முருகன் அவர்களும், திரு. A. நாராயணசுவாமி அவர்களும், மத்திய அமைச்சரவையை அலங்கரிக்கிறார்கள்.