கழிவறையிலும் தங்கள் ஊழல் கைவரிசையை காட்டிய திமுக அரசு - தமிழக பாஜக குற்றச்சாட்டு
Feb 28, 2025, 08:49 IST
கொள்ளையிலும் கொள்ளை இது ஊழலில் கொழுத்த அறிவாலயத்தின் பகல் கொள்ளை என தமிழக பாஜக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஜனவரி 2022-இல் ₹3.18 ஆக இருந்த ஒரு பொது கழிவறையின் பராமரிப்பு செலவு, செப்டம்பர் 2022-இல் ₹363.9 ஆக உயர்வு அதாவது எட்டு மாத காலத்திற்குள் சுமார் 115 மடங்கு அதிகரித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள், “ஒரு கோடிப்பே, ஒரு கோடி” என்ற சினிமா வசனத்தைத் தான் நமக்கு நினைவூட்டுகிறது. அதாவது கறைபடிந்த, தரை பெயர்ந்த ஒரு கழிவறைக்கு, தண்ணீரும் தாழ்ப்பாளும் இல்லாமல் வீச்சமெடுக்கும் ஒரு கழிவறைக்கு பராமரிப்பு செலவு மட்டும் 363 ரூபாயா? கொள்ளையிலும் கொள்ளை இது ஊழலில் கொழுத்த அறிவாலயத்தின் பகல் கொள்ளை.