×

“நேற்று அம்மா... இன்று அப்பா... நாளை உதயா! நான் டாடி பக்கம் இல்ல மோடி பக்கம்”- சேகர்பாபுவை கலாய்த்த தமிழிசை

 

நான் எனது டாடியிடம் சென்றிருந்தால் ஜெயித்திருப்பேன். ஆனால் கொள்கை பிடிப்பு காரணமாக மோடியிடம் சென்றேன். அம்மா அம்மா என்று இருந்த சேகர்பாபு இப்போது அப்பாவிடம் சென்று விட்டார் என டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் தெலுங்கானா ஆளுநரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் தான் வாக்களிக்கும் வாக்குச்சாவடியான சென்னை சாலிகிராமம் காவிரி உயர்நிலைப்பள்ளியில் "SIR" பதிவிற்குப்பின் வாக்காளர்களின் பட்டியலினை  சரிபார்த்து, மற்றும் "SIR" பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “எஸ்.ஐ.ஆர். படிவத்தை கொடுத்து எனது பெயர், கணவர் மற்றும் மகளின் பெயர் உள்ளதா என்பதை பார்க்க வந்தேன். எனக்கு மிகவும் ஆச்சரியம். நேற்றும், இன்றும் புதிய வாக்காளர்களை பார்த்தேன். ஒரு புதிய வாக்காளர் மற்றும் 92 வயது வாக்காளரையும் பார்த்தேன். பி.எல்.ஓ.வுக்கு பாராட்டு. எஸ்.ஐ.ஆர்.குறித்து பயமுறுத்திய அரசியல் வாதிகளுக்கு இது பதிலடி. தேர்தல் ஆணையம் ரிலாக்ஸ்  அரசியல்வாதிகள் டென்ஷன் ஆகிவிடுகிறார்கள். முதல்வர் கிறிஸ்மஸ் விழாவில் பேசும்போது எஸ்.ஐ.ஆர். மூலம் சிறுபான்மை வாக்குகள் நீக்கப்பட இருப்பதாகவும், உங்களுக்கு நாங்கள் துணையாக இருக்கிறோம் என சொல்கிறார்கள். அவருக்கு எனது கடும் கண்டனங்கள். முதலமைச்சர் தனது உறுதிமொழிக்கு எதிராக செயல்பட்டு விஷத்தை கக்கி கொண்டிருக்கிறார். முதல்வர் சிறுபான்மை மக்களுக்கு பயத்தை ஏற்படுத்தி வருகிறார். முதல்வர் இந்துக்களை எதிர்ப்பதில் குறியாக இருக்கிறார். முதலமைச்சர் தீபாவளி பண்டிகைக்கு எங்களுடன் இணைந்து வெடி வெடித்து உள்ளீர்களா முதலமைச்சர் என்றாவது பகவத்கீதையை மேற்கோள் காட்டி உள்ளீர்களா? இந்துக்களுக்கு ஏன் வாழ்த்து தெரிவித்து உள்ளீர்களா?. போலி மதவாதத்தை நாங்கள் நிச்சயமாக எதிர்க்கிறோம். 

எஸ்.ஐ.ஆர். வேண்டும். இன்று 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். இல்லையென்றால் இரட்டை வாக்காளர்கள் இருப்பார்கள். இன்று யாரும் பெரிய அளவில் புதிதாக சேர்க்க வரவில்லை. முதலமைச்சர் என்பவர் எல்லோருக்கும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று இருக்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமியும் நானும் விமானத்தில் சென்றபோது அரசியல் பற்றி தான் பேசினோம். ஒன்றாகத்தான் தேர்தலில் செல்ல போகிறோம் அதனால் ஒன்றாக விமானத்திலும் சென்றோம். அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு ஒரு கோரிக்கை. பள்ளியில் கொலை, பள்ளிக்கு பாம்பு வருகிறது. சுற்றுச்சுவர் சரியில்லை. இதனை அமைச்சர் கவனிக்க வேண்டும். கீழடிக்கு அதிகமான நிதி ஒதுக்கியது பாஜக அரசுதான். அகழாய்வுகளை நாங்கள் மறைக்கவில்லை.  திருப்பரங்குன்றத்தில் பூர்ண சந்திரன் இருந்திருக்கிறார் அவர் இறந்ததை கொச்சைப்படுத்துகிறார்கள் தமிழ்நாடு பற்று எரிகிறதா என்று ஒருவர் கேட்கிறார் பற்றி எரிய வேண்டுமா ?இந்துக்களுக்கும் சிறுபான்மையினருக்கும் வேற்றுமை ஏற்படுத்துவது முதலமைச்சர்தான்.  இந்துகள் தங்களது வலிமையை இந்த தேர்தலில் வாக்குகள் மூலம் காட்டப் போகிறார்கள். என்.டி.ஏ. அரசில் தமிழகத்திற்கு வந்தே பாரத், மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட பல திட்டங்களை வழங்கினோம் என்பதை எங்களால் பட்டியலிட முடியும். ஆனால் காங்கிரஸ் கூட்டணி அரசியல் தமிழகத்திற்கு என்னவெல்லாம் செய்தது என்பதை உங்களால் பட்டியலிட முடியுமா?  திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசின் செயல்பாடு கவலை அளிக்கிறது. திருப்பரங்குன்றத்தில் விளக்கேற்றும் உரிமையை நாங்கள் நிச்சயமாக பெறுவோம். இந்துக்களுக்கும், சிறுபான்மை மக்களுக்கும் இடையே வேற்றுமையை ஏற்படுத்துவது தமிழக முதலமைச்சர்தான்” என்றார்.

தமிழிசைக்கு தமிழக மக்கள் ஏமாற்றம் தான் தந்து கொண்டிருக்கிறார்கள் என்று சேகர் பாபு சொல்கிறார் ? அமைச்சர் சேகர்பாபு போல, அம்மாகிட்ட இருந்து ஐயாக்கு கிட்ட போய் அப்பா கிட்ட வரவில்லை! நான் வெற்றி பெறணும் என்பதற்காக. நான் வந்து மோடி கிட்டே தான் இருக்கிறேன். நான் என்னுடைய டாடி கிட்டயே போல, மோடி கிட்ட தான் இருக்கிறேன். எங்கள் டாடி கிட்ட போயிருந்தால் நான் வெற்றி பெற்ற ஜெயிச்சிருப்பேன். என்னுடைய கொள்கை பிடிப்பு அப்படி. எங்களைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு தார்மீக உரிமையே கிடையாது. அம்மா அம்மா என்று சொல்லிவிட்டு இப்பொழுது அப்பா பின்னாடி சென்று கொண்டிருக்கிறீர்கள்! அதன் பின்னர் உதயா உதயா அதன் பின்னர் இனியா இனியா என்றும், போவீர்கள். நான் தேசம் என்றால் தேசம் என்று செல்கிறேன், தோத்தாலும் தேசத்துக்காக நிற்கிறேன் என்று துணிச்சலாக நிற்கிறேன். நான் நிப்பேன் என்றால் வெல்வேன் வெல்லவில்லை என்றால் தோற்று விட்டு மீண்டும் தமிழக மக்களுக்காக நிற்பேன். நான் ஆளுநராக இல்லாமல் வந்து தெருவில் நின்று ஓட்டு கேட்பதை வெற்றி என்று நினைக்கிறேன். 2026 தேர்தலில் நீங்களா நானா என்று பார்த்து விடலாம் என்றார்.