☰
×

"ராஜ்மோகன் சொன்னது வரவேற்கதக்கது"- தமிழிசை செளந்தரராஜன்  

 

தமிழக முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் அமைச்சரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருக்கின்ற திரு. ராஜ்மோகன் அவர்கள் அரசு ஊழியர்கள் சில குறிப்பிட்ட நாட்கள் பாரம்பரிய உடையில்  வரும்படிஅரசாணை பிறப்பிக்கப்படும் என்று சொன்னார் .. இது வரவேற்கத்தக்கது என பாஜக நிர்வாகி தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக தமிழிசை செளந்தரராஜன் தனது எக்ஸ் தளத்தில், "தமிழக முதலமைச்சர் திரு  விஜய் அவர்கள் அமைச்சரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருக்கின்ற திரு ராஜ்மோகன் அவர்கள் அரசு ஊழியர்கள் சில குறிப்பிட்ட நாட்கள் பாரம்பரிய உடையில்  வரும்படிஅரசாணை பிறப்பிக்கப்படும் என்று சொன்னார் .. இது வரவேற்கத்தக்கது. 2023 ஆம் ஆண்டு புதுவை துணைநிலை ஆளுநராக பணியாற்றியபோது அனைத்து அரசு ஊழியர்களும் ஒவ்வொரு மாதம் ஒன்றாம் தேதி பாரம்பரிய உடையில் வரவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருந்தேன்.. 

வட இந்தியாவைச் சார்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் கூட அதை சரியாக கடைப்பிடித்தார்கள் இன்னும் சொல்லப்போனால் திரு ராஜீவ்வர்மா அவர்கள் இன்று டெல்லி மாநிலத்தின் தலைமைச் செயலாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார் அன்று அவர் தான் புதுவை தலைமைச் செயலர்.. உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சார்ந்தவர்.. அவர் ஒவ்வொரு ஒன்றாம் தேதியும் சரியாக நம் பாரம்பரிய உடை வேட்டி சட்டையோடு  வருவார்.. அப்படி இருக்க ஏன் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தக் கூடாது இதற்கு ஏன் கம்யூனிஸ்டுகள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் திரு சண்முகம் அவர்கள் தனது எதிர்ப்பை தெரிவிப்பதன் மூலம் கம்யூனிஸ்டுகள் இந்திய கலாச்சாரத்திற்கும் தமிழக கலாச்சாரத்திற்கும் எதிரானவர்கள் என்பதை நிரூபிக்கிறார்கள்.. அவர்கள் எதிர்ப்பை நான் வன்மையாக கண்டிக்கிறேன்... பாரம்பரிய உடை அரசு ஊழியர்கள் வருவது ஊக்கப்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்..." எனக் குறிப்பிட்டுள்ளார்.