முதல்வர் அவர்கள் தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாதது வரலாற்று பிழை – தமிழிசை சௌந்தரராஜன்..!
Oct 21, 2025, 13:03 IST
சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தீபாவளியை கொண்டாடினர். தனது குடும்பத்தினர் மற்றும் கட்சியினருடன் அவர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அப்போது வேல் வடிவில் உள்ள பட்டாசு வெடித்த அவர், 2026 தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வெற்றிவேல் ஆக அதனை பார்ப்பதாகத் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சர் தீபாவளி வாழ்த்து சொல்லாதது வரலாற்று பிழை எனத் தெரிவித்தார்.
மேலும் சிவகாசி போன்ற இடங்களில் உயர்ரக தீக்காய சிகிச்சை மருத்துவமனைகளை அமைக்க வேண்டும் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தினார்.