×

"பிரதமரை சந்திக்க செல்லும் முதலமைச்சர் அதிகாரிகளை உடன் அழைத்து செல்ல வேண்டும்"- தமிழிசை

 

பிரதமரை சந்திக்க செல்லும் முதலமைச்சர் அதிகாரிகளை உடன் அழைத்து செல்ல வேண்டும், வெளிப்படையான தன்மையுடன் விஜய் இருக்க வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


சென்னை, தசரதபுரம் பகுதியில், பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மக்களுடன் இணைந்து பார்த்தார். தனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், "பல ஆண்டுகளுக்கு பிறகு பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி நடைபெறுகிறது, வெயில் காலத்தில் நீர் பொருட்களை அருந்த வேண்டும் என்று பிரதமர் கூறியிருக்கிறார். மக்கள் உடல் நலத்துடன் இருக்க வேண்டுமென பிரதமர் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறார். ஆனைமங்கலத்தில் இருந்து நெதர்லாந்துக்கு எடுத்துச் சென்று செப்பு தகடுகளைப் பற்றி பிரதமர் பேசியிருக்கிறார். தவெக திமுக வழியில் பயணம் செய்வது கண்டிக்கத்தக்கது. திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது தவறு என தமிழக மருத்துவத்துறை அமைச்சர் கூறுவது தவறு, முதலில் அவர்கள் துறையில் உள்ள பணிகளை பார்க்க வேண்டும். 

கோயம்பேட்டில், பாரில் வேலை செய்த பெண் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது, மாற்றத்தை கொண்டு வருவேன் என்று சொல்லிவிட்டு மறுபடியும் திராவிட அரசையே விஜய் பின்பற்றுகிறார். திருவள்ளுவருக்கு எப்போதும் உள்ள நிறத்தை தான் நாங்கள் கொடுக்கிறோம். அவரின் நிறத்தை மாற்றியவர்கள் நீங்கள் தான் என்று பேசிய தமிழிசை, திருவள்ளுவர் இந்து தான், அவரின் உடை காவி வண்ணம் தான், அவரை திருவள்ளுவர் நாயனார் என்று தான் அழைப்பார்கள். அதுமட்டுமின்றி சனாதான வாழ்க்கை முறையை பின்பற்றியவர் வள்ளுவர். அவரை காவி உடையில் உருவகப்படுத்துவது எந்த வகையிலும் தவறில்லை. அதுமட்டுமின்றி திமுக வேற்றுமை பேசியதால்தான் மக்கள் நிராகரித்தார்கள்.வள்ளுவரின் உண்மையான உடையை மாற்றி திமுக வெள்ளை நிறம் கொடுத்தது தவறு. அதேபோல் வள்ளுவரின் ஓவியம் கற்பனை என்று கூற முடியாது. நூலகங்களில் நூறாண்டுகளுக்கு உள்ள புத்தகங்களில் திருவள்ளுவரின் பெயர் நாயனார், நெற்றியில் திருநீர் போட்டு இருப்பார். இந்நிலையில்  அவர்களின் அடையாளத்தை அவர்களுக்கு கொடுப்பதுதான் சரியானது. தற்போது தவெக கவனம் சிதறி பேசி வருகிறது.ஆளுவதற்கு மக்கள் வாய்ப்பளித்தும் ஆள் பிடிக்கும் வேலையை தவெக செய்கிறது, தமிழகத்தை பாதுகாப்பதில் தனது முழு கவனத்தை செலுத்த வேண்டும்.முதலமைச்சர் டெல்லிக்கு செல்லும்போது எந்த அதிகாரிகளை அழைத்து சென்றார் என்று தெரியவில்லை, அவருடன் சென்ற அதிகாரிகளின் பெயர் இல்லாமல், மற்றவர்கள் பெயர்தான் உள்ளது.  எனவே இந்த போக்கை முதலமைச்சர் மாற்றிக் கொள்ள வேண்டும், பிரதமரை சந்திக்கும் முன்பு அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி தமிழகத்திற்கு என்ன தேவை என்பது பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அதேபோல் வெளிப்படை தன்மையுடன் முதலமைச்சர் இருக்க வேண்டும்,தவெக தங்களின் பல தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்”என கூறினார்.