“செங்கோட்டையன் என்ன செய்கிறார் என்பதை பார்ப்பது எங்கள் வேலையல்ல”- தமிழிசை
செங்கோட்டையை பிடித்ததுபோல் ஜார்ஜ் கோட்டையை பிடிக்கதான் வேலை செய்கிறோம் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், “முதல்வர் கோவையில் செம்மொழி பூங்காவை திறந்து வைத்திருக்கிறார். ஆனால் அங்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை. ஆனால் பிரதமர் மோடி ராமர் கோயிலில் கொடியை ஏற்றிவைத்துவிட்டு தமிழ்நாட்டின் உத்திரமேரூர் கல்வெட்டை பற்றி பேசியிருக்கிறார். பிரதமர் மோடி தமிழ் பற்றாளரா? அல்லது தாய்மொழி பாடலைக் கூட பாடாத திமுக, தாய்மொழி பற்றாளரா? ஒரே முகவரியில் இருந்த 30, 40 பேர் நீக்கப்பட்டிருக்காங்க. பொய்யான வாக்காளர்கள் இருக்கின்ற பட்டியல் நீக்கப்படும். செங்கோட்டையை பிடித்ததுபோல் ஜார்ஜ் கோட்டையை பிடிக்கதான் வேலை செய்கிறோம். அண்ணன் செங்கோட்டையன் என்ன செய்கிறார் என்பதை பார்ப்பது எங்கள் வேலையல்ல” என்றார்.