×

சீதைக்கே மாமியார் பிரச்சனை இருக்கும் பொழுது நாமெல்லாம் எங்கே?- தமிழிசை

 

சீதைக்கே மாமியார் பிரச்சனை இருக்கும் பொழுது நாமெல்லாம் எங்கே? அதற்கு பெண்கள் ஆகிய நாம் தன்னம்பிக்கையுடன் எதையும் சாதிக்கலாம் என்று உறு திகொள்ள வேண்டும் என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கள விளம்பரப் பிரிவு சார்பில் 'பெண்கள் உரிமைகளும் பாலின சமத்துவமும்' கண்காட்சியை  ஆளுநர்  தமிழிசை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கியும் மருத்துவத் துறையில் பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர். நளினி பார்த்தசாரதிக்கு பொன்னாடை அணிவித்தும் மரியாதை செலுத்தினார்.

பின்னர் விழாவில் பேசிய ஆளுநர் தமிழிசை, “பெண்கள் முதலில் தனக்குள் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு முதலில் நீங்கள் தன்னம்பிக்கையாளராக மாறுங்கள்.  அன்பால் மட்டும் தான் எதையும் சாதிக்க முடியும். அதிகாரத்தால் எதையும் சாதிக்க முடியாது. குடும்பத்தில் பல பிரச்சனைகள் வரலாம். ராமாயண கதையில் வரும், சீதைக்கே மாமியார் பிரச்சனை இருக்கும் பொழுது நாமெல்லாம் எங்கே?. அதற்கு பெண்கள் ஆகிய நாம் தன்னம்பிக்கையுடன் எதையும் சாதிக்கலாம் என்று உறுதிகொள்ள வேண்டும்” என்றார்.

நிகழ்ச்சியில், மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் தெற்கு மண்டல தலைமை இயக்குனர் வெங்கடேஸ்வர்,  மகளிர்  மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு, நலத்துறைச் செயலர் உதயகுமார், மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.