×

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்

 

2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் இணைந்தது.


சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் தமிழக பாஜக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளரும், ஒன்றிய அமைச்சருமான பியூஸ் கோயலை சந்தித்து 2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக கழகம் இணைந்ததை உறுதி செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக மக்கள் முன்னேற்றக கழக தவைவர் ஜான் பாண்டியன், “தேசிய ஜனநாயக கூட்டணியில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை இனிதே நடைபெற்றது. பத்து தொகுதிகளை கொடுத்து அதில் நான்கு தொகுதிகளில் கேட்டு உள்ளோம். அது தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமாக சென்றது. கூட்டணிக்கு தலைமை அதிமுக தான் என உள்ள நிலையில் நேற்று அமமுக தலைவர் மத்திய அமைச்சரை சந்தித்து NDA கூட்டணியில் இணைந்துள்ளார். மத்திய அமைச்சர் அவர்கள் NDA கூட்டணிக்கு தமிழக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதனால் அவரை சந்தித்து டிடிவி தினகரன் NDA கூட்டணியில் இணைந்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் தான் எடப்பாடி பழனிசாமி தான், அதனால் அவரையும் நான் சந்திப்பேன். தற்போது வெற்றியை நோக்கி மட்டுமே பயணம் செய்து வருகிறோம்” என்றார்.

தவெக குறித்தான கேள்விக்கு No comments என பதில் அளித்தார். அப்பா ( ராமதாஸ், அன்புமணி)  மகனை சமாதானம் படுத்துவேன், அது மகிழ்ச்சி அதனை அரசியலாக பார்க்கவில்லை எனவும் அதனை பெருமையாக பார்கிறேன் எனவும் ஜான் பாண்டியன் தெரிவித்தார்.