×

"NDA கூட்டணியில் விஜய் இணைய வேண்டும்! இல்லையெனில் பரிதாப நிலை ஏற்பட்டுவிட்டும்" - தமிழருவி மணியன்

 

விஜய் தனது அரசியல் எதிரியான திமுகவை வீழ்த்த தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற வேண்டும் என தமிழருவி மணியன் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஈரோட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் தமிழருவி மணியன் தலைமையிலான காமராஜர் மக்கள் கட்சி இணையும் விழா நேற்று நடைபெற்றது. விழாவில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் எம்பி, தமிழருவி மணியனுக்கு வேல் வழங்கி தனது கட்சியில் இணைத்துக் கொண்டார். 

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய தமிழருவி மணியன், “விஜய் தனது அரசியல் எதிரியான திமுகவை வீழ்த்த தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற வேண்டும். இல்லையெனில் ஆந்திராவில் நடிகர் சிரஞ்சீவிக்கு ஏற்பட்ட பரிதாபகரமான நிலை விஜய்க்கும் ஏற்படும். தேர்தலில் சிரஞ்சீவியாக இருப்பதா இல்லை பவன் கல்யாணாக இருப்பதா என்ற இரு வாய்ப்பு மட்டுமே விஜய்யிடம் உள்ளது. 1967 ஆம் ஆண்டு அண்ணாவும், ராஜாஜியும் கூட்டணி அமைத்தது சாத்தியம் என்றால், அதிமுக, பாஜக, விஜய் ஒரே அணியில் நிற்பதும் சாத்தியமே. எதிர்வரும் பேரவைத் தேர்தலில் அரசியல் எதிரியை வீழ்த்ததான் விஜய் பாடுபட வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் கொள்கை எதிரியை பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.