×

“கவுன்சிலர் கூட ஆகமுடியல, உதயநிதியை ஒருமையில் பேசுவதா?”- அண்ணாமலையை சாடிய தமிழன் பிரசன்னா

 

திமுக, பாஜக இடையிலான வார்த்தை போர் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் திமுக செய்தித்தொடர்பு இணைச் செயலாளர்  தமிழன் பிரசன்னா பேட்டி அளித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய தமிழன் பிரசன்னா, “ஒரு வார்டு கவுன்சிலர் கூட ஆக முடியாத அண்ணாமலை, எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரையும் டெபாசிட் இழக்கச் செய்த எங்கள் துணை முதலமைச்சரை ஒருமையில் பேசுகிறார் தமிழ்நாட்டுக்கு நியாயமாக பகிர்ந்து அளிக்கக் கூடிய நிதியைக் கூட ஒன்றிய அரசு தர மறுக்கிறது. தமிழ்நாட்டையும், தமிழர்களையும் பாஜகவுக்கு பிடிக்காது. ஆகவே தமிழ்நாட்டுக்கு நியாயமாக பகிர்ந்து அளிக்கக் கூடிய நிதியைக் கூட ஒன்றிய அரசு தர மறுக்கிறது. வர்ணாசிரம ஆட்சி முறையைக் கொண்டு வருவது தான் பாஜக அரசின் நோக்கம். தேசிய கல்விக் கொள்கையை காரணம் காட்டி கல்வி நிதியை மறுக்க முடியாது. இந்தி, சமஸ்கிருதத்தை புகுத்தவே பாஜக அரசு முயற்சிக்கிறது.

புதிய கல்வி கொள்கையில் தாய்மொழிக் கல்விக்கே முக்கியத்துவம் என ஒன்றிய அமைச்சர் கூறுகிறார். தமிழ்நாட்ட்ல் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒரு தமிழாசிரியர் கூட இல்லாததே இவர்கள் தாய்மொழிக்கு கொடுக்கும் லட்சணம். கேந்ந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழாசிரியர் பணியிடங்களை நிரப்பமுடியாது என 5.8.2021 அன்று மாநிலங்களவையில் ஒன்றிய அரசு கூறியுள்ளது. தமிழ்நாட்டில் தமிழ் தேவையில்லை என்பதுதான் பாஜகவின் மொழிக்கொள்கை." எனக் குற்றஞ்சாட்டினார்.