அரசுப் பேருந்தில் ஜொலித்த தமிழக வெற்றிக் கழகம்- வீடியோ வைரல்
நெல்லையில் அரசு பேருந்தில் நடிகர் விஜய் கட்சியின் பெயர் டிஜிட்டல் பலகையில் வந்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 23ஆம் தேதி ஒரே கட்டமாக முடிந்துள்ளது வாக்கு பெட்டிகள் அனைத்தும் வாக்கு என்னும் மையத்தில் தீவிர பாதுகாப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு புதிதாக களத்தில் நடிகர் விஜய்யை தலைமையாகக் கொண்டு தமிழக வெற்றி கழகம் இறங்கியது. பலரின் விமர்சனத்திற்கு உள்ளான நிலையிலும் 233 தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழக வேட்பாளர்கள் களம் கண்டனர். இந்த நிலையில் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான நெல்லை மாநகர பகுதிகளில் இயக்கப்படும் அரசு பேருந்து ஒன்றில் டிஜிட்டல் பெயர் பலகையில் தமிழக வெற்றி கழகம் என்று பெயர் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதை அந்தப் பேருந்தில் பின்னால் வந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தார் அந்த வீடியோ தற்பொழுது வைரல் ஆகி வருகிறது.