வெல்லும் தமிழ் பெண்கள்- 1,30,69,831 மகளிருக்கு உரிமைத் தொகை!
"வெல்லும் தமிழ்ப் பெண்கள்" தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2 ஆவது கட்ட விரிவாக்கம் தொடக்க விழா முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றுவருகிறது.
இந்நிகழ்வில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதன்மூலம் தமிழகத்தில் மொத்தம் 1,30,69,831 மகளிருக்கு கலைஞர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கூடுதலாக 16 லட்சத்து 94 ஆயிரத்து 339 பேர் பயனாளர்களாக இணைக்கப்பட்டுள்ளனர். புதிய பயனாளர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை அட்டைகளை முதலமைச்சர் வழங்கினார். அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கத் திட்டம் தொடங்கப்பட்டது.