பதவியேற்பு விழாவின் போது தமிழ்த்தாய் வாழ்த்து மீண்டும் சர்ச்சை... புதுச்சேரியிலும் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டது
புதுச்சேரியில் முதல்வர் பதவியேற்பு விழா தொடக்கத்தில் வந்தே மாதரம், தேசியகீதம், தமிழ்த்தாய் வாழ்த்து ஆகியவை ஒலிக்கப்பட்டு விழா தொடங்கியது. பதவியேற்பு விழா முடிந்த பின்னர் மீண்டும் வந்தே மாதரம், தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
தமிழகத்தில் விஜய் முதல்அமைச்சராக பங்கேற்றபோது வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. இதற்கு திமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. புதுவையில் முதல்அமைச்சர் பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம் பாடலை பாடக்கூடாது என தந்தை பெரியார் திராவிடர் கழகம் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் இன்று நடந்த பதவியேற்பு விழாவில் தொடக்கத்தில் வந்தே மாதரம், தேசியகீதம், தமிழ்த்தாய் வாழ்த்து ஆகியவை ஒலிக்கப்பட்டு விழா தொடங்கியது. பதவியேற்பு விழா முடிந்த பின்னர் மீண்டும் வந்தே மாதரம், தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
புதுச்சேரி புதிய அரசின் பதவியேற்பில், தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டால், ஆரிய பார்ப்பன வந்தே மாதரம் இசைக்கப்பட்டால், புதுச்சேரி துணை ஆளுநருக்கு கொடி காட்டப்படும் என்று புதுச்சேரி தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்தது. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அவமதிக்காதே, வந்தே மாதரம் பாடதே என புதுச்சேரி துணை நிலை ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழக தோழர்கள் 20 க்கும் மேற்பட்டோர் முன்னெச்சரிக்கையாக அரியாங்குப்பம் ரவுண்டானா அருகே கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.