×

தமிழ் உச்சரிப்பு எனக்கு சிரமம் தான் - நிதியமைச்சர் மரியவில்சன்

 
தமிழ் உச்சரிப்பு எனக்கு சிரமம் தான் - நிதியமைச்சர் மரியவில்சன்

நிதி ஆதாரம் கிடைத்தவுடன் இந்த அரசு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும். தி.மு.க ஆட்சியில் மகளிர் உரிமைத்தொகையை 28 மாதம் கழித்து நிறைவேற்றியதை சுட்டிக்காட்டி அமைச்சர் மரியவில்சன் பேசினார்.

பட்ஜெட் மீதான பதிலுரையின் போது பேசிய நிதியமைச்சர் மரியவில்சன்,  “நான் அன்று ஆவேசப்பட்டது உண்மை தான்; தமிழ் உச்சரிப்பு எனக்கு கொஞ்சம் சிரமம் தான்; அதை நான் மறுக்கவில்லை; எனக்கு தாய் மொழி தமிழ் தான்; நான் பிறந்தது பாண்டிச்சேரி, வளர்ந்தது திருவாரூர், படிச்சது சென்னை, என்னை தத்தெடுத்தது ஆர்.கே.நகர். கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்.. கடமை இருந்தால் வீரன் ஆகலாம்.. பொறுமை இருந்தால்மனிதன் ஆகலாம்.. மூன்றும் இருந்தால்.. தலைவன் ஆகலாம். JPR எப்படி MGRக்கு இருந்தாரோ அதுபோல நான் விஜய்க்கு இருப்பேன். நிதி ஆதாரம் கிடைத்தவுடன் இந்த அரசு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும். பொய் சொல்லாமல் குறுக்கு வழியை கடைபிடிக்காமல் நேர்மையாக இருந்தால் எல்லாம் இங்கு சாத்தியம் என்பதற்கு எங்கள் தலைவரே சாட்சி. முந்தைய அரசு டெண்டர் வழங்குவதில் செய்த முறைகேடுகள் ஒவ்வொன்றையும் ஆராய ஆரம்பித்துள்ளோம். வெற்றி அடைவதற்காக பொய் சொல்லாமல் குறுக்கு வழியை கடைபிடிக்காமல் நேர்மையாக இருந்தால் எல்லாம் இங்கே சாத்தியம் என்பதற்கு முதலமைச்சர் விஜய் ஒரு உதாரணம்” என்றார்.