வெளிமாநிலத்தில் இருந்து வாக்காளர்களை இறக்குமதி செய்வதை தமிழ்நாடு ஏற்காது" - அமைச்சர் ரகுபதி திட்டவட்டம்!
Oct 29, 2025, 11:09 IST
வெளிமாநிலத்தவர் தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் விவகாரத்தில், தேர்தல் ஆணையத்தில் தகுந்த முறையீடுகளை நாங்கள் எடுத்து வைப்போம். வெளிமாநிலத்தில் இருந்து வாக்காளர்களை இறக்குமதி செய்வதை நிச்சயமாக தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது"என கூறியுள்ளார்
வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களை தமிழ்நாட்டில் வாக்காளர்களாக சேர்க்கக் கூடாது என அமைச்சர் ரகுபதி வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் வேலை செய்யும் வடமாநிலத்தவர் எண்ணிக்கை லட்சத்தில் இருந்து கோடியாக மாறியுள்ளது. வடமாநிலங்களில் இருந்து வந்தவர்களுக்கு தமிழ்நாட்டின் சூழ்நிலை தெரியாது என அமைச்சர் கூறியுள்ளார்.