"இந்த ஆதிக்கவாதிகளையும், அடிமைகளையும் எதிர்த்து தமிழகம் போரிட்டு வெல்லும்!" - முதல்வர் மு.க. ஸ்டாலின்..!
Apr 17, 2026, 10:02 IST
முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளப்பதிவு;
பிரிட்டிஷாரைக் கலங்கடித்த தமிழ் வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாள்!
அன்று, நேரடியாகப் போரிட்டு வெல்ல முடியாத ஆங்கிலேய ஆதிக்கவாதிகள் சூழ்ச்சியால்தான் சின்னமலையை வீழ்த்த முனைந்தார்கள்!
* இன்றோ, தமிழ்நாட்டுக்குள் நேரடியாக நுழைய முடியாத டில்லி ஆதிக்கவாதிகள் 'தொகுதி மறுவரையறை' எனும் சதித் திட்டத்தால் நம்மை அரசியல் வலிமையற்றவர்களாக்க முனைகிறார்கள்.
* அன்று, சின்னமலையைக் காட்டிக் கொடுத்தான் ஒரு துரோகி. இன்றும் சில அடிமைகள் தங்கள் சுயநலத்துக்காகத் தாய்த்தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே ஆர்எஸ்எஸ் எஜமானர்களின் காலடியில் அடகு வைக்கின்றனர்.
* இந்த ஆதிக்கவாதிகளையும், அடிமைகளையும் எதிர்த்து தமிழகம் போரிட்டு, வெல்லும் எனத் தீரன் சின்னமலையின் பிறந்தநாளில் சூளுரைக்கிறேன்!,
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.