தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி வெட்டிக் கொலை
Updated: Jul 4, 2025, 21:21 IST
மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
காரைக்கால் மாவட்ட பாமக செயலாளர் தேவமணி கொலைவழக்கில் முக்கிய குற்றவாளியான மணிமாறன் என்பவர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகியாவார். இவர் மயிலாடுதுறையில் நடந்த கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாமில் பங்கேற்று திரும்பியபோது வெட்டி கொலை செய்யப்பட்டார். ம்பனார்கோவில் அருகே தனியார் பள்ளி முன் வழிமறித்த மர்மகும்பல் மணிமாறனை வெட்டி கொலை செய்தது. இக்கொலை தொடர்பாக செம்பனார்கோவில் காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.