×

நேபாளத்தில் இருந்து பத்திரமாக தாயகம் திரும்பிய தமிழக சுற்றுலா பயணிகள்!

 

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து விமானம் மூலம் தமிழர்கள் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றனர். அப்போது, தூதரகம் வாயிலாக தங்களை மீட்க உதவி செய்த நேபாள போலீசார் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தமிழர்கள் நன்றி தெரிவித்தனர்.

 

இந்நிலையில் இது குறித்து ட்விட்டரில் பதிவித்துள்ள எக்ஸ் தள பதிவில்,

கடந்த சில தினங்களுக்கு முன்பு நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அனைவரும் பத்திரமாக தாயகம் திரும்பிட, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாண்புமிகு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. எஸ். ஜெய்சங்கர் அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தோம்.

அந்தக் கோரிக்கையைத் தொடர்ந்து, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. 
நரேந்திர மோடி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், மாண்புமிகு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.ஜெய்சங்கர் அவர்களின் துரிதமான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளால், நேபாளத்தில் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இன்று டெல்லி விமான நிலையத்திற்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அவர்களை மாண்புமிகு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. எஸ். ஜெய்சங்கர் அவர்களுடன் இணைந்து நேரில் வரவேற்றது மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளிக்கிறது.

நெருக்கடியான சூழ்நிலையில் உரிய நேரத்தில் தலையிட்டு, தமிழகத்தைச் சேர்ந்த நமது சகோதர, சகோதரிகள் அனைவரும் பாதுகாப்பாக தாயகம் திரும்புவதற்கு விரைந்து நடவடிக்கை மேற்கொண்ட மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கும் தமிழக மக்கள் சார்பாகவும், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாகவும், பாதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சார்பாகவும் எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

 

நேபாளத்தில் இருந்து பத்திரமாக தாயகம் திரும்பிய தமிழக சுற்றுலா பயணிகள்!

கடந்த சில தினங்களுக்கு முன்பு நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அனைவரும் பத்திரமாக தாயகம் திரும்பிட, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில்… pic.twitter.com/B0na7pfHjD

— Nainar Nagenthran (@NainarBJP) August 28, 2026


 

null