தேசிய மகளிர் சீனியர் கால்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டம் - சசிகலா வாழ்த்து
பெண்களுக்கான தேசிய சீனியர் கால்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டம் வென்றதற்கு சசிகலா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கான தேசிய சீனியர் கால்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. அமிர்தசரஸ் குருநானக் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் அரியானா அணியை எதிர்கொண்ட தமிழக அணி 2-1 என்ற கோல் கணக்கில் கோப்பையை கைப்பற்றியது. தமிழ்நாடு அணி இரண்டாவது முறையாக தேசிய சீனியர் மகளிர் கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் சசிகலா தனது ட்விட்டர் பக்கத்தில், "பெண்களுக்கான தேசிய சீனியர் கால்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.