தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.63,200 வரை சம்பளம்..!
Dec 20, 2025, 05:50 IST
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள 09 அலுவலக உதவியாளர் (Office Assistant), ஓட்டுநர் (Driver) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 02.01.2026 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
| Description | Details |
| வேலை பிரிவு | தமிழ்நாடு அரசு வேலை 2026 |
| அறிவிப்பு வெளியிட்ட துறை | தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் |
| காலியிடங்கள் | 09 |
| பணிகள் | அலுவலக உதவியாளர் (Office Assistant), ஓட்டுநர் (Driver) |
| விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
| கடைசி தேதி | 02.01.2026 |
| பணியிடம் | Chennai |
| அதிகாரப்பூர்வ இணையதளம் |
https://www.tnsec.tn.gov.in/ |
காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வேலைவாய்ப்பு 2026, பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது:
| பணியின் பெயர் | காலியிடங்கள் |
| அலுவலக உதவியாளர் (Office Assistant) | 07 |
| ஓட்டுநர் (Driver) | 02 |
கல்வித் தகுதி
| பணியின் பெயர் | கல்வித் தகுதி மற்றும் கூடுதல் தகுதிகள் |
| அலுவலக உதவியாளர் (Office Assistant) | 1. 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2. மிதிவண்டி (Bicycle) ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். 3. நகல் எடுக்கும் இயந்திரம் (Xerox) மற்றும் பிரிண்டர் இயக்கத் தெரிந்திருக்க வேண்டும். |
| ஓட்டுநர் (Driver) | 1. 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2. 1988-க்கு முன் ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள், அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் பயிற்சி முடித்திருக்க வேண்டும். 3. வாகன இயந்திர நுணுக்கங்கள் மற்றும் முதலுதவி (First Aid) பற்றிய அறிவு கட்டாயம். |
வரம்பு விவரங்கள் :
TNSEC வயது வரம்பு விவரங்கள்:
- பொதுப் பிரிவு (GT): 18 முதல் 32 ஆண்டுகள் வரை.
- பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC / BCM): 18 முதல் 34 ஆண்டுகள் வரை.
- மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC / DNC): 18 முதல் 34 ஆண்டுகள் வரை.
- ஆதிதிராவிடர் (SC / SCA) மற்றும் பழங்குடியினர் (ST): 18 முதல் 37 ஆண்டுகள் வரை.
- ஆதரவற்ற விதவைகள் (அனைத்து பிரிவும்): 18 முதல் 37 ஆண்டுகள் வரை.
- மாற்றுத்திறனாளிகள்: குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும்; அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
- முன்னாள் ராணுவத்தினர் (பொதுப் பிரிவு): அதிகபட்சம் 50 ஆண்டுகள் வரை.
- முன்னாள் ராணுவத்தினர் (BC / MBC / SC / ST பிரிவினர்): அதிகபட்சம் 55 ஆண்டுகள் வரை.
சம்பள விவரங்கள் :
| பணியின் பெயர் | ஊதிய விகிதம் (மாதம்) |
| அலுவலக உதவியாளர் (Office Assistant) | ரூ. 15,700 – 50,000/- (நிலை 1) |
| ஓட்டுநர் (Driver) | ரூ. 19,500 – 62,000/- (நிலை 1) |
தேர்வு செயல்முறை
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பதாரர்கள் பின்வரும் இரண்டு நிலைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:
- விண்ணப்பங்கள் பரிசீலனை: தகுதியான விண்ணப்பதாரர்கள் முதலில் சுருக்கப் பட்டியல் (Shortlisting) செய்யப்படுவார்கள்.
- நேர்காணல்: தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு நேர்காணல் (Interview) நடைபெறும்.
- தகவல் பரிமாற்றம்: நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்த விவரங்கள் விண்ணப்பதாரர்களுக்கு விரைவு அஞ்சல் (Speed Post) அல்லது மின்னஞ்சல் (Email) வழியாக அனுப்பப்படும்.
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 18.12.2025
- விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.01.2026 (மாலை 5:00 மணி வரை)
எப்படி விண்ணப்பிப்பது:
- விண்ணப்பப் படிவம்: தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் https://tnsec.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து மாதிரி விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, அதனை முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.
- இணைக்கப்பட வேண்டியவை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பின்வரும் சான்றிதழ்களின் சுயசான்றொப்பமிட்ட (Self-attested) நகல்களை இணைக்க வேண்டும்:
- கல்வித் தகுதி சான்றிதழ்கள்.
- சாதிச் சான்றிதழ்.
- முன்னுரிமைச் சான்றிதழ்கள் (இருப்பின்).
- அஞ்சல் உறை: ரூ.30/- அஞ்சல் வில்லை (Postage Stamp) ஒட்டப்பட்ட, சுய முகவரி எழுதப்பட்ட ஒரு அஞ்சல் உறை (அளவு 10 x 4 அங்குலம்) விண்ணப்பத்துடன் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: “The Chief Administrative Officer,Tamil Nadu State Election Commission,No. 208/2, Jawaharlal Nehru Road,Arumbakkam, Chennai – 600 106.”