×

ஆந்திராவில் வைத்து சவுக்கு சங்கரை கைது செய்தது தமிழக போலீஸ்..!

 

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், 2024ல் கைது செய்தனர். அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது.இது தொடர்பான வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட், குண்டர் சட்டத்தை ரத்து செய்து அவரை ஜாமினில் விடுவித்தது. பழையபடி அவர், யூடியூப் சேனலில் பேட்டி அளித்து வந்தார்.

இந்நிலையில், 'கஞ்சா வைத்திருந்தார்' என்பது உட்பட வேறு சில வழக்குகளில் அவர் 2024 டிசம்பரில் கைது செய்யப்பட்டார்.மருத்துவ காரணங்களுக்காக அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கிய நீதிமன்றம், வழக்கில் தொடர்புடைய யாரையும் சந்திக்கக் கூடாது, சாட்சிகளை கலைக்கக் கூடாது, யாரைப் பற்றியும் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியிடக் கூடாது. ஒருவேளை இந்த நிபந்தனைகளை மீறி செயல்பட்டால் ஜாமின் ரத்து செய்யப்படும் என சவுக்கு சங்கரை எச்சரித்திருந்தது.

இதற்கிடையே, கடந்த மார்ச் 25ஆம் தேதியுடன் சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்ட ஜாமினும் முடிவடைந்தது. இந்நிலையில், சவுக்கு சங்கர் காவல் நிலையத்திற்கு வந்து சரணடையவில்லை என்றால், போலீசாரே அவரை கைது செய்யலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, சவுக்கு சங்கரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த சென்னை தனிப்படை போலீசார், அவரை தீவிரமாக தேடி வந்தனர். மேலும், அவரை தொடர்பு கொண்டபோது, 'தன்னை முடிந்தால் கைது செய்து பாருங்கள்' என காவல்துறைக்கு சவால்விட்டதாகவும் கூறப்படுகிறது.

மருத்துவ காரணங்களுக்காக இடைக்கால பிணையில் வந்த சவுக்கு சங்கர் உயர்நீதிமன்ற ஆணையை மதிக்காமல், சென்னை காவல்துறைக்கு சவால்விட்ட நிலையில், அவர் ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது.அவரது எக்ஸ் (டுவிட்டர்) கணக்கை முடக்கவும், இன்டர்நெட் ஐ.பி., முகவரியை கேட்டும், சென்னை போலீசார், எக்ஸ் சமூக வலைதளத்துக்கு கடிதம் எழுதியிருந்தனர்.இந்நிலையில், ஆந்திராவில் இருந்த சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், ஒரு யூடியூபரை தேடிச்சென்று ஆந்திராவில் போலீசார் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுந்துள்ளது.