#BREAKING தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் ஹசினா சையத் நீக்கம்
தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் ஹசினா சையத் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் ஹசினா சையத் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் நீக்கம் என அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. இந்த முடிவை அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவி அல்கா லம்பா அறிவித்துள்ளார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், கட்சியின் ஒழுங்கும் நம்பகத்தன்மையும் காக்கவே இந்த முடிவு எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலில் தனக்கு சீட் கிடைக்காததற்கு செல்வபெருந்தகை மற்றும் கிரிஷ் சோடங்கர் தான் காரணம், வேட்பாளர் தேர்வில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை முறையாக செயல்படவில்லை என பேட்டி அளித்த ஹசினா சையத், தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் ஹசீனா சையத், தனது பதவியிலிருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகி, ராகுல் காந்தியிடம் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்து இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.