×

“சட்டமன்ற மன்றத்தில் யாராவது வருத்தப்படும் வகையில் பேசியிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன்”- சபாநாயகரிடம் வருந்திய துரைமுருகன்

 

16வது சட்டப்பேரவை மொத்தம் 161 நாட்கள் நடைபெற்றுள்ளதாக பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

16 ஆவது சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தொடரில் கடைசி நாளில் பேசிய அப்பாவு 5 ஆண்டுகளில் பேரவை அலுவலர்கள் குறித்து விரிவாக பேசினார். இதன்படி, பேரவை 161 நாட்கள் கூடி, 770 மணி நேரம் அவை அலுவல்கள்  நடைபெற்றதாகவும், 22 நாட்கள் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் மற்றும் பதிலுரையும், 84 நாட்கள் மானிய கோரிக்கைகள் மீது விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெற்றதாக கூறினார். மேலும், முதலமைச்சர் தனது பொறுப்பில் உள்ள துறைகள் குறித்து 3 மணி நேரம், இதர துறைகள் தொடர்பாக முதலமைச்சர் 63 முறை பதிலளித்துள்ளதாக கூறினார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் ஜிகே மணி, அருள், தாயகம் கவி, பிராபகர் ராஜா அரவிந்த்  ரமேஷ் ஆகியோர் அதிக கேள்விகளை அளித்துள்ளதாகவும், அமைச்சர்கள் சேகர் பாபு , நேரு, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன்,துரைமுருகன் ஆகியோர் அதிக கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளதாகவும் பேரவை தலைவர் தெரிவித்தார். மேலும், 55 சிறப்பு கவனஈர்ப்பு,  தீர்மானங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், 118 தகவல் கோரல்களுக்கு பேரவையில் அனுமதிக்கப்பட்டு பதில் அளிக்கப்பட்டுள்ளதாகவும்,
230 சட்ட முன் வடிவுகள் அவையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், 70,959 பேர் பார்வையாளர் மாடத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். குறிப்பாக, நான் சட்டமன்ற மன்றத்தில் பேசியது யாரையாவது வருத்தப்படும் வகையில் இருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று அவையில் தெரிவித்து விடுங்கள் என்று அவை முன்னவர் துரைமுருகன் தன்னிடம் கூறியதாகவும் பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்தார்.