×

நாளை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு

 

சென்னை கிண்டியில் நாளை காலை 11 மணிக்கு தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. “Vettri Tamil Nadu Investment Conclave 2026” என்ற பெயரில் மாநாடு நடைபெறுகிறது. முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெறும் மாநாடு மூலம் முதலீடுகளை திரட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து முக்கிய கவனம் ஈர்க்கும் மாநாடாக இது இருக்கும்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களைச் சந்தித்து, நாளை‌ நடைபெறவுள்ள ‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026’ தொடர்பான பணிகளை விளக்கி, மாநாட்டைத் தொடங்கி வைத்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைப்பு விடுத்தேன். தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், முதலீட்டாளர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் மாற்றத்தை உருவாக்குபவர்கள் ஒன்றிணையும் முக்கிய தளமாக இம்மாநாடு அமையவுள்ளது. தமிழ்நாட்டின் மீது உலக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தி, ஒவ்வொரு முதலீட்டையும் மக்களின் முன்னேற்றத்திற்கான வாய்ப்பாக மாற்றும் நமது பயணத்தில், ‘வெற்றி தமிழ்நாடு 2026’ ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.