வாகன ஓட்டிகள் ஷாக் : தமிழகத்தில் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த கட்டண உயர்வு...!
தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. இதன் ஒரு பகுதியாக மதுரை - எலியார்பத்தி சுங்கச்சாவடியிலும் நள்ளிரவு முதல் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது து. கார், வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்களுக்கு பழைய கட்டணத்திலிருந்து ஒரு முறை, இருமுறை பயணத்திற்கு 5 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. மாதாந்திர கட்டணம் 65 ரூபாய் கூடுதல் வசூலிக்கப்படவுள்ளது.
இலகுரக வாகனங்களுக்கு ஒரு முறை செல்ல கட்டணம் உயர்த்தப்படவில்லை. இருமுறை பயணத்திற்கு 5 ரூபாயும்
மாதாந்திர கட்டணம் 105 ரூபாய் கூடுதல் வசூலிக்கப்படவுள்ளது. லாரி பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு ஒரு முறை செல்ல 5 ரூபாயும் இருமுறை பயணத்திற்கு 10 ரூபாயும் கூடுதல் மாதாந்திர கட்டணம் 215 ரூபாயும் வசூலிக்கப்படவுள்ளது.
இரண்டு அச்சு, மிக கனரக வாகனங்களுக்கு ஒரு முறை 5 ரூபாயும் இருமுறை பயணத்திற்கு 20 ரூபாயும் கூடுதல்
மாதாந்திர கட்டணம்345 ரூபாயும்கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணங்கள் பாஸ் டேக்வசதி உள்ள வாகனங்களுக்கு மட்டும் பொருந்தும் எனவும் பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் சுங்கச்சாவடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆண்டுதோறும்சுங்கச்சாவடிகளில் அமல்படுத்தப்படும் கட்டண உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் வாய்ப்பு உள்ளதாக லாரி ஓட்டுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.அதிக கட்டணம் செலுத்துவதை தவிர்க்க வணிக ரீதியாக அல்லாத சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தும் வாகனங்களுக்கு நடைமுறைப்படுத்திய வருடாந்திர பாஸ் எடுத்தால் செலவு குறைவதற்கான வாய்ப்புள்ளது.