×

ஸ்டார்பக்ஸ் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்..!!

 

தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: சென்னை தலைமை செயலகத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் விஜய் முன்னிலையில் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ஸ்டார்பக்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

800 தொழில்நுட்ப நிபுணர்களுக்கு உயர் ஊதிய வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனத்தால் சென்னையில் உலகளாவிய திறன் மையம் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட நிலையில் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் தனது திறன் மையத்தை நிறுவ ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனம் முன்வந்துள்ளது.