×

ஹிட்டாச்சி நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்..!!

 

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

1000 கோடி ரூபாய் முதலீட்டில் 1000 நபர்களுக்கு உயர்தர தொழில்நுட்ப வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் போரூரில் உள்ள ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டம் மற்றும் செங்கல்பட்டில் உள்ள ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி விரிவாக்கத் திட்டம் ஆகிய திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று முதல்வர் விஜய் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

இதன்மூலம் 1000 உயர்தர தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.