×

நுங்கம்பாக்கம் கல்லூரி பாதை ‘ஜெய்சங்கர் சாலை’ என  பெயர் மாற்றம் - தமிழ்நாடு அரசு அரசாணை..!!

 

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரி பாதையின் (College lane) பெயரை 'ஜெய்சங்கர் சாலை' என்று மாற்றம் செய்ய அனுமதி அளித்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், “ பேராசிரியர் விஜய் சங்கர், சங்கர் ஐ கேர் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் அளித்துள்ள மனுவில், மறைந்த திரு. ஜெய்சங்கர் அவர்கள் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகராகவும், பிரபவ நடிகராகவும் இருந்தார் என்றும். மக்கள் கலைஞர் என்றும், தமிழ் சினிமாவின் ஜேம்ஸ் பாண்ட் என்றும்  அழைக்கப்பட்டவர், முன்னாள் முதலமைச்சர்  டாக்டர். கலைஞர் அவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர் என்றும், டாக்டர். கலைஞர் அவர்களால் கலைமாமணி விருது வழங்கப்பட்டது என்றும், பங்வேறு தொண்டு நடவடிக்கைகளில் ஈடுபட்ட அவர், தமிழ் திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கு உதவினார் என்றும். 1964 முதல் 2000 வரை அவர் இறக்கும் வரை கல்லூரிப் பாதையில் (College lane) வரித்து வந்தார் என்றும், அவரது நினைவாக கல்லூரிப் பாதையை (College lane) ஜெய்சங்கர் சாலை என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார். 

 மேலும் பேராசிரியர் விஜய் சங்கர். சங்கர் ஐ கேர் அவர்கள் 31.07.2025 அன்று பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அவர்களின் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் "ஜெய்சங்கர் சாலை" (JAISHANKAR ROAD) என பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென  கேட்டுக்கொண்டுள்ளனர்.  

  மேற்கண்ட சூழ்நிலையில், சென்னை மாநகராட்சி பெருநகர மண்டலம்-09, கோட்டம்-111, நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள கல்லூரி பாதையை (College lane) "ஜெய்சங்கர் சாலை" (JAISHANKAR ROAD) என பெயர் மாற்றம் 30.07.2025 அன்று நடைபெற்ற பெருநகர செய்வதற்கு மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி (தீர்மான எண்.913/2025) அரசாணை வழங்குமாறு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அரசை கோரியுள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையரின் செயற் குறிப்பினை கவனமான பரிசீலனைக்கு பின்னர்,  கல்லூரி பாதையை (College lane) "ஜெய்சங்கர் சாலை" (JAISHANKAR ROAD) என பெயர் மாற்றம் செய்வதற்கு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருக்கு அனுமதி வழங்கி ஆணையிடுகிறது. ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..