×

நாளை நீட் மறுதேர்வு: உதவி எண்களை அறிவித்தது தமிழ்நாடு அரசு!

 

நாளை ஜூன் 21-ம் தேதி நீட் மறு தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு செயலாளர் தாரேஸ் அகமது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

2026-27 கல்வியாண்டுக்கான நீட் மறுதேர்வு நாளை ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. மாணவர்களின் மன உறுதி மற்றும் மனநலம் காக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் "நட்புடன் உங்களோடு" திட்டம் மூலம் தொலைபேசி வழியாக மனநல ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.


'டெலி கவுன்சிலிங்' பெறுவதற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர் தயங்காமல் 14416 அல்லது 104 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு மனநல ஆலோசனைகளை பெற்று கொள்ளலாம். பயிற்சி பெற்ற மனநல ஆலோசகர்கள், டாக்டர்கள் மூலம் இந்த சேவை வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.