☰
×

#BREAKING ஆர்டிஐயில் சட்டம் ஒழுங்குக்கு விலக்கு அளித்ததை வாபஸ் பெற்றது தமிழ்நாடு அரசு

 

சட்டம் - ஒழுங்கு தகவல்களை RTIன் கீழ் பெற விலக்கு அளித்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் பொதுத்துறையின் சட்டம் ஒழுங்கு பிரிவின் கீழ் வரும் சமுதாய மற்றும் சாதிய மோதல்கள், சட்டம் ஒழுங்கு தொடர்பான விசாரணைக் குழுக்களின் பரிந்துரைகள், காவல் மரணங்கள், துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணைகள், அரசியல் காரணங்களுக்காகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மாணவர்கள், விவசாயிகள் போராட்டங்கள் தொடர்பான விவரங்களுக்குத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விலக்கு அளிக்கும் வகையில் இன்று காலை அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்ததையடுத்து வாபஸ் பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.