தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் 17 ஆம் தேதி தாக்கல்..!
Feb 7, 2026, 13:30 IST
சபாநாயகர் அப்பாவு அளித்த பேட்டியில் கூறியதாவது: பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 17 ஆம் தேதி கூடுகிறது. அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார். 2026-27 க்கான முன்பண மானிய கோரிக்கை, கூடுதல் செலவு மானிய கோரிக்கை 20 ஆம் தேதி வாசிக்கப்படும்.
சட்டப்பேரவை கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடத்தப்படும் என அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். சட்டமன்ற நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்கான ஏற்பாடுகள் விரைவில் செய்யப்படும்" என்றார். சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கடைசி கூட்டத்தொடர் என்பதால் சில முக்கிய அறிவிப்புகள் இந்த கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என்ற எதிர்பாப்பு எழுந்துள்ளது.