×

தமிழக அரசு அரசியல் செய்ய வேண்டாம்- தர்மேந்திர பிரதான்

 

தமிழக அரசு அரசியல் செய்ய வேண்டாம் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்,கல்வி நிதி விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் செய்ய வேண்டாம். அரசியல் நிலைப்பாட்டை திணிக்க கூடாது. தமிழக அரசுக்கு கல்வி சார்ந்த நிதியை வழங்கி வருகிறோம். ஆர்டிஇ நிதி தொடர்பாக நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. மும்மொழி கொள்கை என்பது கல்வியை மேம்படுத்தும் ஒரு வெற்றிகரமான முறை. எந்த மொழியையும் திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. 3ஆவது மொழியாக ஏதாவது ஒரு மொழியை படிக்க சொல்கிறோம். தமிழகத்தில் வேறு மொழிகளை திணிக்கவில்லை. தமிழக பள்ளிகளில் ஏற்கனவே தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. மாணவர்களின் நலனைவிட அரசியலில் முக்கியத்துவம் செலுத்தாதீர்கள். இது சரியானது அல்ல.

தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி வழங்கப்படுவதற்கு 2020 தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும். தாய்மொழியுடன் கூடுதலாக 2 மொழிகளை பயில தேசிய கல்விக்கொள்கையில் வகை செய்யப்பட்டுள்ளது. சங்க இலக்கிய காலத்தில் இருந்து இப்போது வரை தமிழ்மொழி அதே துடிப்புடன் உள்ளது. இன்னும் சிறப்பாக செயல்படுகிறது. தமிழக அரசு தனது அரசியல் எண்ணத்தை மாணவர்கள் மத்தியில் திணிக்கிறது. தமிழக அரசின் செயல்பாடு தவறானது. தமிழக அரசு தனது அரசியல் எண்ணத்தை மாணவர்கள் மத்தியில் திணிக்கிறது. தமிழக அரசின் செயல்பாடு தவறானது. தமிழ்நாடு மாநில பாடத்திட்ட பள்ளிகளில் தெலுங்கு, உருது, மலையாளம் என பல மொழிகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. அப்படி இருக்கும் போது மூன்றாவது மொழி என வரும்போது மட்டும் என்ன பிரச்சினை?” எனக் கேள்வி எழுப்பினார்.