புதிய துணை சுகாதார நிலையங்களை உருவாக்க தமிழ்நாடு அரசு திட்டம்
தமிழகத்தில் புதிதாக 642 துணை சுகாதார நிலையங்களை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் சுகாதார கட்டமைப்பில் துணை சுகாதார நிலையங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. சுகாதார அமைப்புகளுக்கும் மக்களுக்கும் இடையில் உள்ள முதல் தொடர்பு இந்த துணை சுகாதார மையங்கள் ஆகும். இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தமிழகத்தில் புதிதாக 642 துணை சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதை செயல்படுத்தும் விதமாக 10,000 மக்கள் தொகைக்கு அதிகமாக உள்ள தொகுதிகளில் 642 துணை சுகாதார நிலையங்களை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தன்படி மக்கள் தொகைக்கு ஏற்ப கிராமப்புறங்களில் 617 மெய் சுகாதார நிலையங்களும் நகர்ப்புறங்களில் 25 துணை சுகாதார நிலையங்களும் உருவாக்கப்பட்டுள்ளது. தொடக்க நிலை சுகாதார வசதிகள் உடனடியாக கிடைக்கும் வகையில் இந்த புதிய துணை சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.