சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவுபிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது பதிவு செய்யப்பட்ட குண்டர் சட்டத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது .
முந்தைய திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு, ஆட்சியில் இருந்தபோது ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் மீது தொடர்ந்து வழக்குகளும், குண்டர் சட்டங்களும் பாய்ந்து வந்த நிலையில் புதிதாக வந்துள்ள முதல்வர் விஜய் தலைமையிலான அரசு அந்த குண்டர் சட்டத்தை ரத்து செய்துள்ளது. தவெக மற்றும் முதல்வர் விஜயை கடுமையாக விமர்சித்தவராக இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல், சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது. குண்டர் சட்ட நடவடிக்கைக்கான போதிய காரணங்கள் இல்லை என அறிவுரைக் கழகம் கூறியதன் அடிப்படையில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வேறு வழக்கு எதுவும் நிலுவையில் இல்லை என்றால் சவுக்கு சங்கர் சிறையில் இருந்து உடனடியாக விடுவிக்கப்படுவார் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.