கிராமப்பகுதிகளிலும் தொழில் உரிமம் கட்டாயம்- தமிழக அரசு உத்தரவு
கிராமப்பகுதிகளில் செயல்படும் டீ கடைகள் முதல் திருமண மண்டபங்கள் வரை கட்டணம் செலுத்தி தொழில் உரிமம் பெறுவது கட்டாயம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கிராமப்பகுதிகளில் செயல்படும் டீ கடைகள் முதல் திருமண மண்டபங்கள் வரை கட்டணம் செலுத்தி தொழில் உரிமம் பெறுவது கட்டாயம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் முதலீடு அடிப்படையில் நகர்புறங்களை ஒட்டியுள்ள ஊராட்சிகளில் 1000 முதல் 50 ஆயிரம் வரையிலும், மற்ற ஊராட்சிகளில் 250 முதல் 35 ஆயிரம் வரையும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நகர்புறங்களை ஒட்டியுள்ள ஊராட்சிகளில் வணிக நிறுவனங்களின் குடோன்களுக்கு 700 முதல் 10 ஆயிரம் வரையிலும், மற்ற ஊராட்சிகளில் 500 முதல் 7 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின் கீழ் வகைபடுத்தப்பட்ட தங்கும் விடுதிகளுக்கு 2 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையும், திருமண மண்டபங்களுக்கு 2 ஆயிரம் ஆயிரம் முதல் 30 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தனியார் வாகன நிறுத்தங்களுக்கு 1 ஆயிரத்து 500 முதல் 18 ஆயிரம் வரை உரிம கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இறைச்சி கடைகளுக்கு ஆயிரத்து 500 ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.