☰
×

அமைச்சர்களுக்கு 26 லட்சம், MLA-க்களுக்கு 15 லட்சத்தில் கார் - தமிழக அரசு அரசாணை 

 

தமிழகத்தில் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அமைச்சர்களுக்கு அரசு சார்பில் கார் வழங்குவதற்கான புதிய விதிகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.


அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களுக்கு அரசு கார் வழங்கும் அரசாணையை அரசு செயலாளர் சுந்தரவல்லி வெளியிட்டுள்ளார்.  1955-ம் ஆண்டு சட்டமன்ற பயணப்படி விதிகளில் திருத்தம் செய்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி,  அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர், அரசு தலைமை கொறடா ஆகியோருக்கு - ரூ.26 லட்சம் வரை விலையில் கார் வாங்கலாம். மற்ற அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் - ரூ.15 லட்சம் வரை விலையில் கார். இந்த விலை என்பது வெறும் Ex-Showroom விலை மட்டும் இல்லை, வரி, ரிஜிஸ்ட்ரேஷன் கட்டணம், இன்சூரன்ஸ் எல்லாம் சேர்த்து தான். ஒவ்வொரு ஆண்டும் இந்த உச்சவரம்பு 5% கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து கார்களும் Government GeM Portal மூலமாகவும், BS-VI விதிகளின்படியும் தான் வாங்க வேண்டும். அமைச்சர்களுக்கான காரை அரசே அரசின் பெயரில் வாங்கும். சபாநாயகர் உள்ளிட்டோருக்கு சட்டமன்ற செயலகமும், மற்ற எம்.எல்.ஏ-க்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களும் காரை வாங்கி தருவார்கள். அமைச்சர்களுக்கு பெட்ரோல், டிரைவர், பராமரிப்பு செலவை பொதுத்துறை பார்த்துக்கொள்ளும். சபாநாயகர் உள்ளிட்டோருக்கு சட்டமன்ற செயலகம் பார்த்துக்கொள்ளும். மற்ற எம்.எல்.ஏ-க்களுக்கு வாகனப்படியில் இருந்து அவர்களே செலவை பார்த்துக்கொள்ள வேண்டும். பதவி காலம் முடிந்தாலோ, இறந்தாலோ, பதவி நீக்கம் செய்யப்பட்டாலோ, ராஜினாமா செய்தாலோ உடனடியாக காரை அரசிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.