×

“90நாட்களில் 5 கோடி தடுப்பூசிகள் வேண்டும்” உலகளாவிய டெண்டர் கோரியது தமிழக அரசு!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 18 வயதிலிருந்து 45 வயது வரை உள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக 18 வயதுக்கும் மேலானவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கவில்லை. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 12ம் தேதி நடைபெற்றக் கூட்டத்தில், உலகளாவிய ஒப்பந்தப்
 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 18 வயதிலிருந்து 45 வயது வரை உள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக 18 வயதுக்கும் மேலானவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கவில்லை.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 12ம் தேதி நடைபெற்றக் கூட்டத்தில், உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய முடிவெடுத்தது. அதன்படி, தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு உலகளாவிய ஒப்பந்தப்புள்ளியை தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் கோரியுள்ளது. முதற்கட்டமாக 5 கோடி கொரோனா தடுப்பூசிகளை 90 நாட்களுக்குள் வழங்கிட வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.