×

ஸ்மார்ட் மின்சார மீட்டர் திட்டத்தை கைவிட தமிழ்நாடு அரசு முடிவு

 

ஸ்மார்ட் மின்சார மீட்டர் திட்டத்தை கைவிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்மார்ட் மின்சார மீட்டர் திட்டத்தை கைவிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு மார்ச்சில் டெண்டர் கோரப்பட்டு, 50 நிறுவனங்கள் இதில் பங்கேற்ற நிலையில், தேர்தல் காரணமாக டெண்டர் திறப்பு தாமதமானது. இந்த நிலையில், மின்வாரியத்தின் நிதி நெருக்கடியை சமாளிக்க, இத்திட்டத்தை தவெக அரசு கைவிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வீடுகளில் அதிநவீன ஸ்மார்ட் மீட்டர்கள் (Smart Meters) பொருத்தப்பட்டால்,  மிகச்சிறிய அளவிலான மின் நுகர்வைக் கூட மிகத் துல்லியமாகக் கணக்கிடும் திறன் கொண்டவை. இதனால் மின் பயன்பாட்டு அளவு முந்தைய காலங்களை விடச் சற்று உயர வாய்ப்புள்ளது. இனி மின் வாரிய ஊழியர்கள் நேரில் வந்து கணக்கெடுக்க வேண்டிய அவசியம் இருக்காது; அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே கண்காணிக்கும்.மேலும், உங்கள் வீட்டில் மின்கசிவு (Leakage) ஏற்பட்டாலோ அல்லது மின் பயன்பாடு வழக்கத்தை விட அதிகரித்தாலோ, அது குறித்த எச்சரிக்கை குறுஞ்செய்தி உடனடியாக உங்கள் மொபைல் எண்ணிற்கு அனுப்பும் என்பது குறிப்பிடதக்கது.