×

சுற்றுச்சூழல்தாக்க வரைவு குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு குழு அமைப்பு!

மத்திய அரசு EIA எனும் புதிய சுற்றுச்சூழல் திட்டத்திற்கான வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதனால் விவசாயமும் இயற்கை வளங்களும் பெரிதும் பாதிக்கப்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய சூழலியல் தாக்க மதிப்பீடு 2020 ஆம் ஆண்டு வரைவு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு எதிரானது எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கையின் சாதக, பாதகங்களை ஆய்வு செய்ய 12
 

மத்திய அரசு EIA எனும் புதிய சுற்றுச்சூழல் திட்டத்திற்கான வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதனால் விவசாயமும் இயற்கை வளங்களும் பெரிதும் பாதிக்கப்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய சூழலியல் தாக்க மதிப்பீடு 2020 ஆம் ஆண்டு வரைவு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு எதிரானது எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கையின் சாதக, பாதகங்களை ஆய்வு செய்ய 12 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது. வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் தலைமையில் 12 பேர் கொண்ட குழு நியமினம செய்யப்பட்டுள்ளனர். இக்குழுவில் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர், பொதுப்பணித்துறை தலைமை செயலாளர் உள்ளிட்டோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.