×

துப்பாக்கி முனையில் தமிழக மீனவர்கள் கைது : மனித உரிமை மீறல் என அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்!

தமிழக மீனவர்கள் 47 பேரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்ததற்கு அமைச்சர் ஜெயக்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் சிறை பிடித்துள்ளனர். எல்லை தாண்டி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பகுதியில் மீன் பிடித்ததாக ராமநாதபுரத்தை சேர்ந்த 27 மீனவர்கள், புதுக்கோட்டையை சேர்ந்த 70 மீனவர்கள் என 47 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களின் 7 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தில்
 

தமிழக மீனவர்கள் 47 பேரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்ததற்கு அமைச்சர் ஜெயக்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் சிறை பிடித்துள்ளனர். எல்லை தாண்டி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பகுதியில் மீன் பிடித்ததாக ராமநாதபுரத்தை சேர்ந்த 27 மீனவர்கள், புதுக்கோட்டையை சேர்ந்த 70 மீனவர்கள் என 47 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களின் 7 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப் படுவார்கள் என்று கூறப்படுகிறது. அத்துடன் இலங்கை மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தியதாக 23 இந்தியா படகுகள் மீன் பிடிக்கும் உரிமையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், “தமிழக மீனவர்கள் வேண்டுமென்றே எல்லை தாண்டுவது கிடையாது. இதுமனித உரிமை மீறல். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைப்பதை ஏற்க முடியாது . இலங்கை கடற்படைக்கு மத்திய அரசின் மூலம் அழுத்தம் தரப்படும் ” என்றார்.