×

தமிழக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை 2 வாரங்களில் வெளியிடப்படும் – நிதியமைச்சர் மரிய வில்சன்..!

 

புதுச்சேரியில் 76வது ஜூனியர் தேசிய கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் பங்கேற்று வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை 2 வாரங்களில் வெளியிடப்படும் எனவும் அதன் பிறகு திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டார்.